ஒளி 4 | என் பார்வையில் | En parvaiyil
Update: 2020-10-04
Description
வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை
பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளை
பாலின் நிறமொறு குட்டி
எந்த நிறம் இருந்தாலும் - அவை
யாவும் ஒரேதரம் அன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃ
தேற்ற மென்றுஞ்சொல்ல லாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை இல்லை.
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
In this episode we will try to explain about skin color with real life example.
Comments
In Channel









